மகிந்தவின் அதிரடி நடவடிக்கை
தென்னிலங்கை அரசியலில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்குள் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
அதற்கமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற குழுவினரை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களும் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களையும் இந்த குழுவில் சேர்ப்பது குறித்து கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு நிலைப்பாடு
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயற்படவுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு போதியளவு உறுப்பினர்கள் இருப்பதால், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
