அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவரது இரட்டைப் பதிவு தொழிலை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
இம்முறை சுமார் 20 வைத்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
பதவிக்கு சிக்கல்
எனினும், மருத்துவராகப் பதிவு செய்துள்ள அர்ச்சுனா இராமநாதன், உத்தியோகபூர்வமாக தனது வேலையை விட்டு விலகாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்ட போதும், அவர் மருத்துவத் தொழிலைக் கைவிடவில்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அரசாங்கத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தில் மற்றொரு தொழில் மூலம் சம்பளம் பெற முடியாது என்பது இலங்கையில் உள்ள நடைமுறையாகும்.

இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் நிலை தோன்றலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்னவும் தனது வைத்தியர் தொழிலை கைவிடாது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமைக்காகவே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவாகியுள்ளது.
விதிமுறை மீறல்
வைத்தியர் ராஜித சேனாரத்ன தொடர்பான விவகாரம் இலங்கை அரசியல் மற்றும் சட்ட செயல்பாடுகளில் முக்கியமானதாகும். 1994இல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது மருத்துவர் தொழிலை தொடர்ந்திருந்தார்.
இந்த செயல் இலங்கையின் சட்டங்களின் கீழ் ஒரு அரச அதிகாரி அல்லது தேர்தல் பதவி வகிப்பவர் எந்த ஒரு வேறு தொழிலையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது என்ற விதிமுறைக்கு எதிராக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துச்செல்லப்பட்டபோது, அவர் வைத்தியர் தொழிலை நிறுத்திவிட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.சுயேட்சைக் குழு எம்.பி வைத்தியர் அர்ச்சுனா ஊடகங்கள் முன் பேசுபொருளானமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam