தேர்தலைக் கண்டு அஞ்சும் கூட்டம் பெரமுனவினர் இல்லை: மகிந்த
தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்ல, நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் விகாரைக்கு நேற்று (27.01.2023) விஜயம் செய்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ஜயர சிறி மகா போதியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச அதமஸ்தானாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரரையும் பார்வையிட்டுள்ளார்.
வெற்றி வாய்ப்பு உறுதி
பின்னர் ருவன்வெலி மகாசாயாவை வழிபட்ட மகிந்த, ருவன்வெலி சைத்தியராமதிகாரி ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் தரிசித்துள்ளார்.
இதன்போது தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருக்கின்றது. தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர் என்று கூறினார்.
தமக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்ற பின்னர் தேர்தலுக்குத் தாம் ஏன் பயப்பட வேண்டும் என்றும் கேள்வி இதன்போது எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 58 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
