சீன ஜனாதிபதிக்கு வாழ்த்து மடல் அனுப்பிய மகிந்த (Photos)
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி செங்கொன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
பரஸ்பரம் நல்லெண்ண அடிப்படையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மீண்டும் சீன ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் ஷி ஜின்பிங்கிற்கான வாழ்த்து மடல் ஒன்றை மகிந்த ராஜபக்ச சீனத் தூதுவரிடம் கையளித்தார்.
விரிவாக கலந்துரையாடப்பட்ட விடயம்
சீன - இலங்கை உறவு, பொருளாதார அபிவிருத்தி, இரு நாடுகளுக்கும் இடையான பொதுவான வேலைத்திட்டம் ஆகியன பற்றியும் இந்தச் சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான காமினி
லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, ரமேஷ் பத்திரன, கலாநிதி சுரேன் ராகவன்,
பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் பங்குபற்றினர்.







திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
