தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு!
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கை தூதுவர் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் ஆற்றிய சேவை குறித்து தற்போதைய அரசாங்கத்திற்குள் மாத்திரமன்றி நாட்டு மக்களிடத்திலும் பெரும் மதிப்பை பெற்றுள்ளார்.
அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்
அவரது சேவையை அரசியல் ரீதியாக மேலும் பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியலில் நீண்ட காலம் பயணித்த அவர், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டு தூதரக சேவையில் இணைந்து கொண்டார்.

கடந்த பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam