சர்வகட்சி மாநாடு:ஜனாதிபதியிடமிருந்து சஜித்துக்கு சாதகமான பதில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த சில நாட்களில் சர்வகட்சி மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
டொலரின் பெறுமதி உயர்வினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க உடனடியாக சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமையவே அடுத்த சில நாட்களில் சர்வகட்சி மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர நாடாளுமன்ற விவாதம்
அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியிலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் இடையில் (22.05.2026) அன்று பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் போதே அவர்கள் சபாநாயகரிடம் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
The rupee is under tremendous pressure. And we don’t have clear answers nor plans.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 22, 2026
Today, together with other party leaders, we met the Hon. Speaker and requested an urgent parliamentary debate on the prevailing crisis. The people deserve honesty, and immediate action before…
'ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கத்திடம் தெளிவான பதில்களோ அல்லது திட்டங்களோ இல்லை.
இன்று ஏனைய கட்சித் தலைவர்களுடன் இணைந்து சபாநாயகரைச் சந்தித்து தற்போது நிலவும் நெருக்கடி நிலை குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரியிருந்தோம்.
நிலைமை மோசமடைவதற்கு முன்னர் மக்களுக்கு உண்மையான மற்றும் உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன' என எதிர்க்கட்சித் தலைவர் பதிவிட்டுள்ளார்.
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan