மகிந்த மகனின் உயர் மட்ட பணமோசடி வழக்கு: திகதியொன்றை அறிவித்த நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிரான உயர்மட்ட பணமோசடி வழக்கின் அடுத்த விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 11 ஆம் திகதி, விசாரணை தொடரும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றின் அறிவிப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், இருவரும் சுமார் 73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை, சட்டவிரோதமாக ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்களைப் பெற்றதன் மூலம் யோசித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
