இலங்கையை உலுக்கிய கோர விபத்து : சோகத்தில் மூழ்கிய கிராமம்
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைத்து ஊழியர்களின் உடலங்களும் தற்போது தங்காலை நகர சபைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர்களின் உடலங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர சபையில் அஞ்சலிக்காக
அதன்படி, காலை 10 மணி முதல் உடலங்கள் நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே.ரூபசிங்க மற்றும் 12 ஊழியர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 15 பேரும் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பேருந்து விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகளில் பேருந்து சாரதிகளின் கவனக்குறைவே முதன்மைக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



