ராஜபக்சர்களுக்கு மற்றுமொரு தோல்வி - கடைசி நேரத்தில் நாமலுக்கு நேர்ந்த கதி
எதிர்க்கட்சித் தலைவராக நாமல் ராஜபக்ச முன்னிலை வகித்து வந்த நிலையில் உடனடியாக அதை அவர் மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், ஊடக சந்திப்பை நடத்திய பின்னர் ராஜபக்ச குடும்பம் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதன் சுமையை எதிர்க்கட்சி மீது வலுக்கட்டாயமாக திணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி குழுக்கள்
இதன் காரணமாக கோபமடைந்த ஏனைய எதிர்க்கட்சி குழுக்கள் நாமல் ராஜபக்சவை கைவிட்டுவிட்டதாக அரச தரப்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தனிமைப்படுத்தப்பட்டதை போன்று நாமல் ராஜபக்சவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறுகல் நிலை ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாமல் ராஜபக்ச
மேலும் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குழுவிற்கு எதிராக சில எதிர்க்கட்சி பிரமுகர்கள் ஆக்ரோஷமாக பதிலளித்து வருகின்றனர்.
மேலும் அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை வகித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



