ஏலத்திற்கு செல்கிறதா வான் வழிப்பாதை..! தொடர் கொந்தளிப்பில் அரசு மீதான புதிய குற்றச்சாட்டு

Mahinda Rajapaksa Sri Lanka Politician Easter Attack Sri Lanka Sri Lanka Government Suresh Salley
By Dhushi Jun 19, 2026 12:01 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தும், அதுகுறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், கொழும்பு - லண்டன் போன்ற வான்வழிப் பாதைகளைத் தனியாருக்கு வழங்கி, கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நேற்று(18.06.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை

சலே சித்திரவதை திரைப்படக்காட்சியே

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (CID) தொடர்ச்சியாகத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இதன்போது, அந்தப் பிரிவுகளின் பிரதான நாற்காலிகளில் இருந்தவர்களே இன்றைய விசாரணைப் பிரிவுகளிலும் இருக்கிறார்கள். தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்திருந்தால், நாட்டின் ஜனாதிபதிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ தெரிவிக்க முடியாவிட்டாலும், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த யாராவது ஏன் அதனை கர்தினால் ஆண்டகைக்கு அறிவிக்கவில்லை?

ஏலத்திற்கு செல்கிறதா வான் வழிப்பாதை..! தொடர் கொந்தளிப்பில் அரசு மீதான புதிய குற்றச்சாட்டு | Mahinda S Criticism Of Easter Attack Investigation

200- க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாவதற்கு பிரதான காரணமாக இருந்த இவர்களுக்கு, தற்போதைய விசாரணைகளுக்குள் இருப்பதற்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது.

இன்று சுரேஷ் சலேயையும், கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய முற்படுவதன் மூலம் அரசாங்கம் ஒரு திரைப்படக்காட்சி போன்ற நாடகத்தையே அரங்கேற்றி வருகிறது.

தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ள வான்வழிப்பாதை

உண்மையான குற்றவாளிகளை விசாரிப்பதை விடுத்து, மக்கள் மத்தியில் வேறு ஒரு சித்திரத்தைக் காட்ட முனைகிறார்கள். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்களின் உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான புதிய தலைப்புகள் தினமும் பேசப்படுகின்றன.

அதே வேளை, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சீனாவுக்குச் சென்று வந்துவிட்டு, தங்களுக்கு 5 ஆண்டுகள் போதாது, 20 அல்லது 25 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

ஏலத்திற்கு செல்கிறதா வான் வழிப்பாதை..! தொடர் கொந்தளிப்பில் அரசு மீதான புதிய குற்றச்சாட்டு | Mahinda S Criticism Of Easter Attack Investigation

நாட்டை ஒரு ராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்துவதற்கான திட்டமே இதன் பின்னணியில் உள்ளது. மேலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை தயாரித்த ஒருவரையே தற்போதைய அரசாங்கம் அதன் தலைவராக நியமித்துள்ளது.

இலாபம் ஈட்டக்கூடிய கொழும்பு - லண்டன் போன்ற வான்வழிப் பாதைகளைத் தனியாருக்கு வழங்கி, கொள்ளையடிப்பதற்கே இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது என குற்றம் சுமத்தியுள்ளார். 

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்



மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US