மைத்திரிக்கு மகிந்த வழங்கியுள்ள ஆலோசனை!
நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குண்டுத்தாக்குதல்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,மைத்திரிபால சிறிசேனவின் கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாக கருதப்படும்.
ஜனாதிபதி வேட்பாளர் யார்
மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அவசரபப்ட வேண்டியதில்லை.உரிய நேரத்தில் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சி தான் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறும்.சகல தரப்புக்கும் சம அந்தஸ்து கிடைக்கப்பெற வேண்டுமாயின் பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
