பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு
விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைக்கு போதுமானளவு வெங்காய இருப்பை உறுதி செய்யவும் வெங்காய ஏற்றுமதிக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் முதல் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை இந்தியா விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த தடை காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8 ஆம் திகதி இந்திய அரசு பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், சிறப்பு அனுமதியின் அடிப்படையில் நட்பு நாடுகளுக்கு பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு
இதற்கயைம, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷுக்கு இந்தியா 64,400 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்திருந்தது.
இந்நிலையில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளமை சில நாடுகளின் சந்தைகளில் வெங்காயத்தின் விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
