மகிந்தவின் பதவி விலகல் அறிவிப்பு! கொழும்பின் பல பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள்
கொழும்பின் பல பகுதிகளில் மக்களால் பட்டாசுகள் வெடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை முதல் கொழும்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அரசாங்கத்திற்கு அதிலும் குறிப்பாக மகிந்தவிற்கு ஆதரவாக அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.
| பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த! சற்று முன்னர் வெளியானது தகவல்(Photo) |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri