மகிந்த ராஜபக்சவின் நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்ள ஆலோசனை
பாதுகாப்பு விடயங்களைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்ள அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அண்மையில் மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு
அத்துடன் எதிர்வரும் நாட்களில் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பவற்றையும் விலக்கி 60 பொலிஸாரை மட்டுமே பாதுகாப்புக்கு வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் முக்கிய கூட்டங்கள், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வைபவங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதற்கிடையே மகிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகா சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியொன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஒரு சில தரப்புகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |