பதவி விலகியதும் மகிந்த விடுத்த அழைப்பு! உடன் ஏற்றுக் கொண்ட ரணில்
மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுத்த அழைப்பை ஏற்க ஏனையவர்கள் பின்வாங்கிய போதும் ரணில் விக்ரமசிங்க தானாக முன்வந்து சவாலை ஏற்றுக் கொண்டார் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது கடினமான பாதை
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை பொருளாதார ரீதியில் மீட்பதற்காக தற்பொழுது அரசாங்கம் பயணம் செய்து வருகின்ற பாதைக்கு மாற்றுவழி எதுவுமே கிடையாது. இது கடினமான பாதையாக இருந்தாலும், அப்பாதையில் பயணித்தே ஆகவேண்டும்.

தற்போதையை ஜனாதிபதியை நாட்டின் தலைவராக நாங்கள் மதிக்கிறோம். ஏனெனில் தனது பதவி விலகலுடன், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிய போதும் ஏனைய கட்சித் தலைவர்கள் அனைவரும் பயந்து பின்வாங்கினர். ஆனால் ரணில் விக்ரமசிங்க முன்வந்து சவாலை ஏற்றுக்கொண்டார்.
அத்துடன், அன்றைய ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகலுடன் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று நாட்டுக்குத் தேவையான கடமைகளை நிறைவேற்றினார்.
திவாலான நாட்டை மீட்க அவர் எப்படி உழைத்தார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, நாட்டு மக்கள் சரியான நேரத்தில் சரியான பதிலை வழங்குவார்கள் என தெரிவித்தார்.
பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan