முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் இரத்து.. எழுந்துள்ள புதிய சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக இச்சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "1986ஆம் ஆண்டு 04ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவை மனைவிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கொடுப்பனவுகளே புதிய சட்டமூலத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் குறித்த கொடுப்பனவுகள் ஒருங்கிணைந்த நிதி கட்டமைக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதால் அதை நிர்வகிப்பதற்காகவே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
வர்த்தமானி அறிவித்தல்
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகள் இருக்கும் வீடுகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்.

அத்தோடு பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் இதர கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என்றார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு இலக்க ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச்செய்தல்) சட்டம் என்று அடையாளப்படுத்தப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri