நாட்டில் மீண்டும் உருவாகியுள்ள பொருளாதார சுமை
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாக தம்மிக பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளரும், குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான இலங்கையின் சிறந்த நிபுணருமான தம்மிக பண்டார தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் அண்மைக்காலமாக குற்றவாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பொருளாதார சுமையாக மாறியுள்ள
அதன் காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த பொலிசாரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தேசிய உற்பத்தியில் பங்களிக்க வேண்டிய மனித வலு வீணாகிக் கொண்டிருக்கின்றது.
அதே போன்று குற்றவாளிகளாக சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் நபர்களின் மனைவி பிள்ளைகள் வருமானத்துக்காக சட்டவிரோத செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம் போன்றவற்றில் நாட்டம் கொள்கின்றனர்.
இவ்வாறாக நாட்டுக்கு பெரும் பொருளாதார சுமையாக மாறியுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri