இந்தியாவுடனான வர்த்தக உறவை புதுப்பிக்க வலியுறுத்து
இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க இலங்கை முயற்சிக்க வேண்டும் என இந்திய-இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அண்மையில் செய்து கொள்ளப்பட்ட இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அவசரமாக பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள
எனவே இதேபோன்ற இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று குறித்த சபை இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியுள்ள, இந்திய -இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, இந்தியாவுடனான அதன் புவியியல் அருகாமை மற்றும் ஏற்கனவே உள்ள உறவுகள் காரணமாக, இந்தியாவுடன் உடன்படிக்கையை செய்துகொண்டால், இலங்கை இன்னும் அதிக லாபம் ஈட்டும் என்று சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவுடனான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (நுவுஊயு) இலங்கைக்கு இதே போன்ற நன்மைகளைத் திறக்கக்கூடும் என்றும் குறித்த சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு இந்தியா ஒரு மூலோபாய பங்காளி மட்டுமல்ல, உடனடி அண்டை நாடு மற்றும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும் என்றும் இந்திய-இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan