மகாநாயக்க தேரர்களை மிரட்டிய மகிந்த ராஜபக்ச!அநுர அடிபணிந்தாரா?
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடையணிவித்ததற்காக மகிந்த ராஜபக்ச கூட்டணி மற்றும் சிங்கள கடும்போக்குவாதிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கின்றன.
ஆனால் 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச காலத்தில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கேலிக் கூத்தாக்கிய ஒரு செயற்பாட்டையே விளக்கப் போகிறோம்: இது விக்கிலீக்ஸ் செய்திகளில்கூட குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவமாகும்.
அதாவது 2010 பெப்ரவரி மாதத்தில் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து அவரைச் சிறையில் அடைத்ததற்கு எதிராக சங்க சம்மேளனத்தை நடத்தவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் முயற்சித்த போது தேர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளார்.
எப்பவும் வராத சட்டச் சிக்கல்
ஜே.ஆர்.- பிரேமதாச விஜயதுங்க சந்திரிகா மகிந்த மைத்திரிபால கோட்டாபய ரணில் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தனர். இந்த எந்த ஆட்சி முறையிலும் சிறைகளில் இருக்கும் தேரர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் உள்ள சட்ட விதிகளில் சிக்கல் உள்ளது என்று யாரும் பேசியதில்லை.
பலர் சிறைச்சாலை ஆடையுடன் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டபோது யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஏதோ முதன்முறையாகவே நடந்ததாக தற்போதைய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
அவ்வாறு எழுதியவுடன் ஜனாதிபதி அவர்களை அழைத்துச் சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கினார். இருப்பினும் இப்போதும் இவர்கள் கூறுவது என்னவென்றால் 'இது பௌத்த மதத்திற்கு முரணானது பௌத்த மதத்தை மதிக்காத பௌத்த பிக்குகளை இழிவாக நடத்தும் ஆட்சி இது' என்கின்றனர்.

அதனால்தான் வரலாற்றை நினைவுகூர விரும்புகிறோம். 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்று பௌத்த நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் இணைந்து இதற்குப் பதிலளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
தி இந்து பத்திரிகையிலும் இந்த செய்தி வெளிவந்தது. அதாவது 2010 பெப்ரவரி 15 ஆம் திகதியிட்ட கடிதத்தில் 'சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அன்றைய ஜனாதிபதி ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தனர் - ஒருவீரரை இவ்வாறு செய்யாதீர்கள்' என்று கோரினர்.
மேலும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது.குறுகிய அரசியலுக்காக ஒரு வீரனுக்கு இப்படிச் செய்வதும் நியாயமற்றது' கருணா அம்மான் போன்ற போராளிகள் அரசாட்சியின் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டினர்.
இது போன்ற பல விடயங்கள் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாநாயக்க தேரர்கள் மூன்று நிக்காயக்களையும் இணைத்து ஒரு மகா சங்க சம்மேளனத்தை (மாநாட்டை) கூட்ட முயற்சித்தனர்.
மகிந்த மகாநாயக்க தேரர்களுக்கு விடுத்த எச்சரிக்கை
இதற்கு மகிந்த ராஜபக்ச மகாநாயக்க தேரர்களிடம் பழிவாங்க விரும்பினார். நாங்கள் சொல்லும் வழியில் நீங்கள் நடக்கவில்லை என்றால் நாங்கள் புதிதாக ஒரு நிக்காயவை உருவாக்குவோம் ரோகண நிக்காய.மல்வத்துவிற்கு சொந்தமான விகாரைகளை குறித்த புதிய நிக்காயவுக்குப் பொறுப்பளிப்போம்.
இந்த நிலங்களையும் சொத்துக்களையும் அந்த புதிய நிக்காயவுக்கு வழங்குவோம். 500 விகாரைகளை கொடுத்து ஒரு நிக்காயவை உருவாக்குகிறோம் என்று கூறுகிறார். பெப்ரவரி 18 ஆம் திகதி கூட்டப்படவிருந்த கூட்டம் குறித்து அப்போது அத்தங்கனே ரதனபால தேரர் பிபிசியிடம் இவ்வாறு கூறுகிறார்.
மகா சங்க சபை இரத்துச் செய்யப்பட்டது. ' மகாநாயக்க தேரர்கள் மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது' என்று ரதனபால தேரர் கூறுகிறார். இது குறித்து அப்போது அமெரிக்கா (US State Department) வெளியிட்ட மதச் சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றும் உள்ளது.

அதாவது ஏராளமான விகாரைகளுக்கு அநாமதேய மிரட்டல்கள் விடுக்கப்பட்டன அதாவது பிக்குகள் வரும் பஸ்களின் மீது குண்டு வீசப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அரசின் அறிக்கையில் உள்ளது.
இது போன்ற மிரட்டல்கள் இன்னும் பல விவரங்கள் உள்ளன. மகாநாயக்க தேரர்களை மிரட்டிய விதம் வரலாற்றில் பல்வேறு ஆவண மூலங்களில் எழுதப்பட்டுள்ளன.அவ்வாறு செய்தவர்கள்தான் இன்று இப்படி பேசுகிறார்கள்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் மகாநாயக்கர்கள் அறிக்கை விட்டவுடன் அதற்குக் செவிமடுத்து அதற்கேற்ப நாட்டின் சட்டங்களை வரலாற்றில் முதன்முறையாக ராஜபக்சக்கள் செய்யாததை இந்த அரசாங்கம் செய்கிறது. ராஜபக்சக்கள் தங்களது குறுகிய நோக்கங்களுக்காக விகாரைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். எப்போதுமே அவர்கள் சொல்வதைக் கேட்டது கிடையாது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri