கம்பீரமாக சுற்றித்திரிந்த மகிந்த ராஜபக்சவிற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை!(Video)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் தவிர்த்து விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் சாப்பிடுவதற்கு பெரும்பாலான எம்.பி.க்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர், ஆனால் தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுகிறார்.
மேலும் அவர் பிரதமராக இருந்த காலத்தில், நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது , அவரை வரவேற்க ஏராளமான எம்.பி.க்கள் கூட்டம் பிரதான நுழைவு வாசல் அருகே திரண்டிருப்பார்கள், ஆனால் இன்று அவர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியுடன்தான் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறார்.
இதேவேளை அவருக்கு மிக நெருக்கமான இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே இன்றுவரை அவ்வப்போது அவருடன் இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
