மகிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மாருக்கு தானம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினம் இன்று என்பதுடன் அதனை முன்னிட்டு பாலூட்டும் தாய்மாருக்கு தானம் வழங்கும் நிகழ்வு நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பௌத்த பிக்குமார் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி செத் பிரித் ஓதினர்.
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் புண்ணிய தானம்
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதியும் கொழும்பு பல்கலைக்கழக வேந்தருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஆலோசனைகளுக்கு அமைய மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வருடந்தோறும் இந்த புண்ணிய தானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மகிந்த ராஜபக்சவுக்கு தற்போது 77 வயதாகிறது.