மகிந்தவுக்காக பசிலினால் எடுக்கப்பட்ட முயற்சியில் பெரும் தோல்வி
பிரதமராக மகிந்த ராஜபக்சவை தொடர்ந்தும் நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தாமரை மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களை கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அழைத்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கைச்சாத்திடப்பட்ட மனு இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளித்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரையிலும் 50 கையொப்பங்களேனும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
பசில் ராஜபக்சவினால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது பெரும் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்தும் மகிந்தவை பிரதமர் பதவியில் வைப்பதற்கு எதிர்ப்பு என்பதனை வெளிப்படுத்தும் வகையில் பசிலின் அழைப்புகளை உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
