"மஹிந்தவினால் வழிகாட்டப்படுகின்றமை தமக்கு கிடைத்த பாக்கியம்"- ஜனாதிபதி கோட்டாபய
தனது சகோதரரும், இலங்கையின் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச, தமக்கு நிலையான பலமாக இருப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு சகோதரரான கோட்டாபய ராஜபக்ச தொிவித்த வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் மஹிந்தவின் பிறந்தநாளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அவரால் வழிகாட்டப்பட்டமை தனக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்துள்ளார்
“எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் இவ்வளவு மகத்துவம் கொண்ட ஒருவரால் வழிகாட்டப்பட்டதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இலங்கை அரசியலில் அழியாத முத்திரையைப் பதித்த எனது அன்புச் சகோதரரே, உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர், தமக்கு நிலையான பலமாக இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
