முக்கிய கலந்தாலோசனைக்காக கூடும் மகிந்தவின் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபையும் அரசியல் சபையும் இன்று (07.06.2024) கூடுகின்றன.
இந்த சந்திப்பு கொழும்பு (Colombo) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுகிறது.
கலந்தாலோசனை
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, கட்சிக்குள் முக்கிய நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதியளவில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும், இதனையடுத்து 16ஆம் திகதியில் தமது கட்சி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
