பழைய நண்பர் மகிந்தவை சந்தித்த சீனாவின் பிரதியமைச்சர்
சீனாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வீடோங் (Sun Weidong) இன்று பீய்ஜிங்கில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksha) சந்தித்து, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச, 2014ஆம் ஆண்டு ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் (Xi Jinping) இலங்கை விஜயத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
இலங்கையும் சீனாவும் பட்டுப்பாதை திட்டத்தின் முன்முயற்சியில் மிகச் சிறந்த பங்காளிகளாக இருப்பதாக துணை அமைச்சர் சன் வெய்டாங் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் விஜயம்
சமாதான சகவாழ்வுக்கான சீனாவின் ஐந்து கோட்பாடுகள் மற்றும் மனித குலத்திற்காக பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான சீன ஜனாதிபதியின் பார்வைக்கு இணங்க, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோர் கலந்து கொண்ட அமைதியான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பீய்ஜிங்கிற்கு சென்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
