குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடு வழங்குமாறு பிரதமர் மஹிந்த உத்தரவு
குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபகஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு, பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த திட்டங்களை எந்த தாமதமும் இன்றி விரைவாக பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பம்பலப்பிட்டி மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசங்களில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறும் உரிய ஒப்பந்த நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தி அதிகமான மக்களுக்கு வீட்டு வசதி கிடைக்கும் வகையில் திட்டத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
