தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Rajapaksa Family
By Sajithra Sep 17, 2026 12:14 PM GMT
Report

அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் பேரழிவாக மாறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த கட்டுரையில், கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், மதுபோதையில் இருந்த கட்சி ஆதரவாளர்கள் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை வெளிப்படையாக 'திருடன்' என்று முழக்கமிட்டதும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும், பலர் வரவிருக்கும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் வெளிப்படையாகக் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாமலின் கைது.. 

எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பாக செப்டெம்பர் 4ஆம் திகதியன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது; எனவே, இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த SLPP முயன்றதாகவும் விமர்சிக்கப்படுகின்றது. 

தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி | Mahinda Family Podujana Peramuna Politics

அவர் இல்லாத நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை கட்சி மேடைக்குக் கொண்டு வந்தமை பரவலான பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. 

அரசியல் பிழைப்புக்காக உடல்நலம் குன்றிய ஒரு தலைவரைப் பயன்படுத்திக் கொண்டதாக இது விமர்சிக்கப்படுவதாக குறித்த கட்டுரை தெரிவிக்கின்றது. 

தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி | Mahinda Family Podujana Peramuna Politics

மேலும், இக்கூட்டம் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிக்குள் நிலவும் ஆழமான கொள்கை ரீதியான குறைபாடுகள், இரட்டை வேடம் மற்றும் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.

இக்கூட்டம் எதிர்க்கட்சிப் பிரிவுகளுக்கு இடையிலான கடுமையான உட்கட்சி மோதல்களையும் முரண்பாடான கூட்டணிகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது! என்பிபி அமைச்சர் திட்டவட்டம்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது! என்பிபி அமைச்சர் திட்டவட்டம்

தள்ளாடிய நிலையில் மகிந்த.. 

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் மாறிய முன்னாள் கூட்டாளிகளைப் பேச்சாளர்கள் கடுமையாகச் சாடினர்; அதே நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இயற்கை உரம் தொடர்பான நெருக்கடி போன்ற கடந்தகால நிர்வாகத் தோல்விகளுக்கு அவர்கள் மீது குற்றம் சாட்டினர்.

தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி | Mahinda Family Podujana Peramuna Politics

குறிப்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மேடையில் தன்னை பற்றி வெளிப்படையாக கருத்து ஒன்றை முன்வைத்த போது, ​​விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முக்கிய தேசியவாதத் தலைவர்கள் கூட்டத்தினருடன் இணைந்து ஆரவாரம் செய்தனர்;

இது அவர்களின் தீவிர தேசபக்தி ஒரு அரசியல் நாடகம் என்பதையும், கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் அவர்களுக்கு இருந்த பற்றாக்குறையையும் வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. 

தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி | Mahinda Family Podujana Peramuna Politics

இந்தக் குழப்பநிலை முக்கிய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காணப்படும் ஒரு பரந்த போக்கை பிரதிபலிக்கிறது; நீண்ட காலத் திட்டம் ஏதுமின்றி, உடனடி எதிர்வினைகளைச் சார்ந்த குறுகிய கால உத்திகளிலேயே அவர்கள் சிக்கியுள்ளதாக அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. 

இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அரசியல் வியூகங்களுக்கு தானே வழிவகுத்து கொடுத்தது போல் ஒருநிலையில் மொட்டுக் கட்சி தற்போது இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

அரசியலில் தலைகீழ் மாற்றம்..! ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு வரலாம் - சீலரத்ன தேரர்

அரசியலில் தலைகீழ் மாற்றம்..! ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு வரலாம் - சீலரத்ன தேரர்

YOU MAY LIKE THIS.. 


நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US