சிறைச்சாலைகளில் வெடிக்கும் மோதல் - நிர்வாகத்தின் தவறே இது..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அந்த அரசாங்கத்திற்கு நாட்டை அல்ல சிறைச்சாலையை கூட நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கைதிகள் அரசாங்கம் பொறுப்பு
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே கைதிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்திற்கு செய்ய முடியாவிட்டால் நாட்டின் பொறுப்பை வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் முதல் தடவையாக 11 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறான கலவரம் இடம் பெற்ற நிலையிலும் அரசாங்கம் ஏனைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்ய தவறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மஹர சிறைச்சாலையில் வன்முறை இடம்பெற்றமையை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அரசாங்கத்திற்கு சிறைச்சாலை ஒன்றை நிர்வாகம் செய்யக்கூடிய திறன் இல்லை என தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO