மகாநாயக்க தேரர்கள் ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க தீர்மானம்
நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் விசேட உயர்மட்டக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று கூட்டு எதிரணியின் உறுப்பினர் சுகீஸ்வர பண்டார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகள்
அத்துடன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குக் கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், "சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்துக் கடுமையான நிபந்தனைகளையும் எவ்வித மறுப்புமின்றி ஏற்கும் நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசு இருக்கின்றது.
அரசின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து, இந்தச் சந்திப்புகளின் போது மகாநாயக்க தேரர்களுக்கும் ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுக்கும் விரிவாகத் தெளிவுபடுத்தப்படும்" என்றும் கறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam