தொடரும் மோசமான காலநிலை! மறு அறிவித்தல் வரை விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்ற வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவுறுத்தல்
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இக்கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
