செந்தமிழ் மந்திரம் ஒலிக்க குடும்பிமலையில் மகா யாக உற்சவம் (Photos)
வரலாற்று தொன்மைவாய்ந்த குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்தின் மகா யாக உற்சவப் பெருவிழா நிறைவடைந்துள்ளது.
செந்தமிழ் மந்திரம்
குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்தின் உற்சவகால பாதயாத்திரை மற்றும் வருடாந்த அலங்கார உற்சவம் செந்தமிழ் மந்திர ஒலியுடன் மகா யாக உற்சவப் பெருவிழா குடும்பிமலையில் நேற்று (06.10.2022) நிறைவடைந்துள்ளது.

வருடாந்தாம் குமரன் ஆலயத்திற்கான பாதயாத்திரை மரபுவழியாக முருகப்பெருமானின் ஆதியிருப்பிடமான வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுத கோவிலில் இடம்பெறும் விசேட பூஜையுடன் ஆரம்பமாகும்.
இதற்கமைவாக நேற்று ஆரம்பமான பாதயாத்திரைக்கு பல நூற்றுக்கணக்கான அடியார்களுடன், பாரம்பரியமாக ஆலயத்திலிருந்து ஆதிவேல் மற்றும் தேன் மற்றும் திணைமா கோவில் சித்தாண்டி முருகன் கோவில் வன்னிமை தலைமையில் வழங்கி வைக்கப்பட்டதும் பாதயாத்திரை ஆரம்பமானது.
பாதயாத்திரியர்கள் முதல் நாள் பள்ளத்துச்சேனை மகா விஸ்ணு ஆலயத்தை சென்றடைந்ததுடன் அன்றிரவு ஆலயத்தில் விசேட பூஜை மற்றும் பஜனை என்பன இடம்பெற்றுள்ளன.
குமரன் மலையுச்சி
ஆலய உற்சவகால இரண்டாம் நாளுக்குரிய பாதயாத்திரை பள்ளத்துச் சேனையிலிருந்து காலை ஆரம்பமாகி குடும்பிமலை குமரன் ஆலயத்தை வந்தடைந்ததும் மலையடி விநாயகர் பூஜை இடம்பெற்றதுடன் அடியார்கள் கண்ணகி அம்மனை வழிபட்டு ஆதிவேலுடனும் அரோகரா கோஷத்துடனும் நூற்றுக்கணக்கான அடியார்கள் மலையேறினர்.

குடும்பிமலை குமரன் சந்நிதியை சென்றடைந்ததும் ஆடியார்களினால் பக்தியமானது குமரன் மலையுச்சி.
ஆதிவேல் கொண்டுவரப்பட்டு விசேட பூஜைகளுடன் பக்தி பஜனை பாடல்கள் இடம்பெற்றன.
அதன்பின்னர் ஆதிவேலுக்கு கும்பாபிசேகம் இடம்பெற்றதும் அலங்கார விசேட பூஜை நடைபெற்றது. பின்னர் செந்தமிழ் ஆகமத்தில் அதிகாலை பூஜை இடம்பெற்றதுடன் இவ்வருடத்திற்கான அலங்கார உற்சவம் இனிதே நிறைவடைந்துள்ளது.
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam