சிறை அதிகாரிகளுக்கு நீதவான் வழங்கியுள்ள அறிவுரை!
தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்று,கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவர்களை ஒன்றாக சங்கிலியால் பிணைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள நபர்களும் மனிதர்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்பட தகுதியானவர்கள் என்றும் அதிகாரிகளுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.
நீதிவான் கருத்து
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழு ஒன்றை, அதிகாரிகள், நேற்று, நீதிமன்ற அறைக்குள் கொண்டு வந்ததைக் கவனித்த பின்னர், மேலதிக நீதிவான் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் மேலதிக நீதிவான் திறந்த நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்தநிலையில், தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை முறையான நடைமுறைகளின்படி நீதிமன்ற அறையில் வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
