சிறைச்சாலைகளை உடைத்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கும் கைதிகள்! அநுரவை வீழ்த்த நடக்கும் சதியா
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக சமூக செயற்பாட்டாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஊழல்வாதிகள், கடந்த கால அரசாங்கத்திலே குற்றச் செயல்களிலே ஈடுபட்டோர் தாங்கள் போய் சிறைச்சாலைகளில் இருப்பதற்கு சிறைச்சாலைகள் உகந்த நிலையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைக்கு செல்ல இருக்கக்கூடிய ஊழல்வாதிகளும் கடந்த காலத்தில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் தங்களுக்கு சிறைச்சாலைகள் சரியான விதத்தில் இல்லை, அங்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயத்தை கூறி சிறைக்கு செல்வதை தடுக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நிச்சயம் தண்டணை வழங்கும்.சிறைச்சாலைகள் இல்லாவிட்டாலும் புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு ஊழல்வாதிகள் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,