வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இதழ் வெளியீட்டு விழா மற்றும் ஊடகக் கண்காட்சி
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடக கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
நிஜமும் நிழலும் இதழின் முதற் பிரதி
அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
அதன்பின்னர் "நிஜமும் நிழலும்" இதழின் முதற் பிரதியை பாடசாலையின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் வெளியிட்டு வைக்க அதனை பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பெற்றுக் கொண்டார்.
இதழ் வெளியீட்டு நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் ஊடக கண்காட்சி ஆரம்பமானது. அதன்பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
ஊடக கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பிரதம அதிதியாகவும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பிரேமலொஜி சுதேஷ்குமார் சிறப்பு அதிதியாகவும், சிரேஷ்ட பத்திரிகையாளர் தர்மினி பத்மநாதன் அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், இதில் ஊடகத்துறை ஆசிரியர் அனுராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
