நான் நிரபராதி - அமெரிக்க நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த மதுரோ
அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு பதவியிழக்கச் செய்யப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்ற விசாரணைகளின் போது நிராகரித்துள்ளார்.
மதுரோவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் தாம் குற்றமற்றவர் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரோவிற்கு எதிராக போதைப் பொருள்–தீவிரவாத சதி, கோகெய்ன் இறக்குமதி சதி, இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவூட்டும் ஆயுதங்களை வைத்திருந்தமை, உள்ளிட்ட நான்கு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
“நான் நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் (Alvin Hellerstein) எதிரில் முன்னிலையான மதுரோ, குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்தார்.
“நான் நிரபராதி. நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. நான் ஒரு நல்ல மனிதன்,” என மதுரோ நீதிமன்றத்தில் கூறினார்.

இதேவேளை, மதுரோவின் மனைவி சிலியா பளோரஸூம் தாம் குற்றமற்றவர் எனவும் தாம் ஓா் அப்பாவி எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரோ தம்பதியினர் நீதிமன்றில் பிணை கோரவில்லை எனுவும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் வாசித்து காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதுரோ தம்பதியினருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி மீண்டும் நடைபெறும் என நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நடைபெறும் இந்த வழக்கு, வெனிசுவேலா–அமெரிக்கா உறவுகள் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க அரசியல் சூழ்நிலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு சர்வதேச கவனத்தை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri