திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி
மடுல்சிம - பிடமருவ வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி அணையில் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளதாக மடுல்சிம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்தல் படுகாயமடைந்ததவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இ்த விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடுல்சிம - பிடமருவ பிரதேசத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வானில் நுவரெலியா நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் வானின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், விபத்தின் போது வானில் 12 பேர் பயணித்ததாகவும், அவர்களில் நால்வர் காயமின்றி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
