பிரான்சின் அடுத்த பிரதமர்! ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட நெருக்கமான பெயர்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நாட்டின் புதிய பிரதமராக பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னுவை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு பிரதமர் பிராங்கோயிஸ் பைரூ செவ்வாய்க்கிழமை தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அடுத்த பிரதமர்
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்னும் சில தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் அடுத்த பிரதமருக்கான வரிசையில் பல பெயர்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
பிரான்சின் அடுத்த பிரதமராக ஜனாதிபதி மக்ரோனுக்கு நெருக்கமான, நம்பகமான மற்றும் நீண்ட கால அமைச்சரவை அனுபவம் உள்ள உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நாட்டின் புதிய பிரதமராக பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னுவை பரிந்துரைத்துள்ளார்.
39 வயதான லெகோர்னு, அந்தப் பொறுப்பை ஏற்கும் முக்கிய விருப்பத்தேர்வாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஆயுதப்படைகள் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
பிரான்ஸ் கடன்
குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் போரை எதிர்கொள்ளும் பிரான்சின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
பிரான்ஸ் தற்போது அதிகரித்து வரும் பொது கடனில் சிக்கியுள்ளது. இவ்வருடம் முதலிலேயே அது €3.3 டிரில்லியன் (£2.8 டிரில்லியன்) எட்டியுள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யின் 114% ஆகும். பய்ரூ, €44 பில்லியன் மதிப்பிலான செலவுக் குறைப்புத் திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.
தனது திட்டத்தை நம்பிக்கைவாக்கெடுப்புக்குக் கொண்டுசெல்லும் அவர் எடுத்த முடிவு தோல்வியடையும் என்பது முன்பே தெரிந்திருந்தது.
இறுதியில் பிரான்ஸ் தேசிய சபை, 364 வாக்குகள் எதிராக 194 வாக்குகளால் அவரது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தது.
லெகோர்னுவின் நியமனம் ஏற்கனவே இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
