கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 6 பேர் பலி! அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்திய ஹமாஸ்
கட்டார் தலைநகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தோஹாவில் உள்ள அவர்களின் பேச்சுவார்த்தை குழு தப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
பேச்சுவார்த்தை குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை படுகொலை செய்ய எதிரியின் தோல்வியை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
ஆறு பேர் பலி
இந்த தாக்குதல் "சந்தேகத்திற்கு இடமின்றி நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் அமைதிக்கான எந்த உடன்பாட்டையும் எட்ட விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தாக்குதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்களுக்கு அதன் தொடர்ச்சியான ஆதரவு காரணமாக, இந்த குற்றத்திற்கு அமெரிக்க நிர்வாகம் ஆக்கிரமிப்புடன் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அடுத்து, தோஹாவில் நடந்த கூட்டத்தின் போது அவர்களின் பேச்சுவார்த்தை குழு குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri