இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற தமிழர்
டெல்லியில் இடம்பெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள மூன்றாவது தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.
இந்திய-தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதி தேர்தல் இன்று(9) நடைபெற்றது.
துணை ஜனாதிபதி தேர்தல்
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது.

இதில் மொத்தம் 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட நிலையில், 767 வாக்குகள் பதிவாகின. 14 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, பதிவான 767 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
அபார வெற்றி
எஞ்சிய 752 வாக்குகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார்.
அவர் துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri