வடக்கு மசிடோனியாவில் பாரிய தீ விபத்து: 60 பேர் வரை பலி..! 150இற்கும் மேற்பட்டோர் காயம்
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், 155க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இரவு விடுதியில் இன்று அதிகாலை 02:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் ஏற்பட்ட இவ்விபத்தினால் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கொழும்பில் தமிழ் வர்த்தகர் படுகொலை : வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு..! அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
வாணவேடிக்கை
இந்நிலையில், பல "இளம் உயிர்களை" இழந்த நாட்டிற்கு இது "கடினமான மற்றும் மிகவும் சோகமான நாள்" என்று அந்நாட்டு பிரதமர் ஹிருஸ்டிஜன் மிக்கோஸ்கி தெரிவித்துள்ளார்.
#LATEST — Death toll in North Macedonia's Kocani nightclub fire rises to 51, with over 100 injured during hip-hop concert; reports suggest pyrotechnics may have sparked blaze pic.twitter.com/LzbGqUsftT
— Türkiye Today (@turkiyetodaycom) March 16, 2025
இவ்விபத்தானது, அதிக, எரியக்கூடிய பொருட்களால் ஆன கூரையைத் தாக்கிய வாணவேடிக்கை சாதனங்களிலிருந்து வந்த தீப்பொறிகளால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, கூரையில் தீப்பற்றியதை அணைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தவேளை அங்கு சென்றிருந்தவர்கள் வெளியேறாமல் அவற்றை பார்த்து கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விபத்தில் முன்னதாக 51 பேர் இறந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் அரசாங்கம் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளதுடன் அனைத்து இரவு விடுதிகள் மற்றும் பெரிய கூட்டங்களை நடத்தும் உணவகங்களில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ளவும் உள்ளதாகவும் அறவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





