முதல் மாவீரர் சங்கரின் இல்லம் அமைந்த இடத்தில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி
மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று (27), மறைந்த தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வழியில் கம்பர்மலையில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.
கம்பர்மலையில் தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் மாவீரர் சங்கரின் வீடு அமைந்திருந்த இடத்திற்கு முன்பாக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலரஞ்சலி
இதன்போது கப்டன் பண்டிதரின் தாயார் ஈகைச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கப்டன் பண்டிதரின் இல்லத்திற்குச் சென்ற அவர்கள், அவரது உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.




