யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் அரங்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் மாணவர் அரங்கு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு இன்று (17.01.2024) கலைப்பீட பரீட்சை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
“தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள்” எனும் தலைப்பில் புதன்கால மாணவர் அரங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த வார புதன்கிழமை மாணவர் அரங்கில் "திட்டமிட்ட சிங்கள – பௌத்தமயமாக்கமும் பண்பாட்டு அழிப்பும்" எனும் தலைப்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய துணைத் தலைவரும் சமூகவியற்துறை மாணவனுமான நிதுர்சன் லம்பேட் கருத்துரையாற்றியுள்ளார்.
முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்
மேலும், "நிலமிழந்தால் பலமிழப்போம்!" எனும் தலைப்பில் கலைப்பீட ஒன்றிய துணைச் செயலாளரும் சட்டத்துறை மாணவனுமான சிவகஜனும் உரையாற்றியுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் புதன்கால மாணவர் அரங்கில் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |