பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கற்றல் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலான சுற்றறிக்கையை வெளியிட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
விரிவுரையாளர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உபதலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கை
இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில், கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் சம்பளத்துடன் கொடுப்பனவு சேர்க்கப்படும் எனவும் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பான கடிதங்கள் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
