கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு
கிண்ணியா நகர சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சந்தியின் வேட்பாளர் எம்.எம்.மஹ்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று (17)நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
எம்.எம்.மஹ்தி தெரிவு
இதன்போது, எம்.எம்.மஹ்தி பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுட்பினர் அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மொத்தமாக 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 04 உறுப்பினர்களும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ,பொதுஜன ஐக்கிய முண்ணனி சார்பில் தலா ஒருவரும் அடங்குவர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 13 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan