வவுனியாவில் கைது செய்யப்பட்ட சொகுசு பேருந்து உரிமையாளர் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்த நிலையில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின் குறித்த பேருந்து சேவையின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
போக்குவரத்து நடவடிக்கைகளின் போது
இந்நிலையில் குறித்த பேருந்து உரிமையாளரை புதன்கிழமை (05.08.2026) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன், சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குறிதத சொகுசு பேரூந்தின உரிமையாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, புளியங்குளததில் ஏற்பட்ட விபத்து சம்பவம் துர்திஸ்டவசமானது. ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
போக்குவரத்து நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் எதிர்பாரதவை. இருந்த போதும் அன்றைய சம்பவம் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதவை.
குறித்த பேருந்து விபத்தால் மரணித்த குடும்பஸ்தரின் இழப்பை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக நாம் மனம் வருந்துவதுடன அவர்களின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கான தேவையான சில உதவிகளையும் நாம் செய்திருந்திருந்தோம்.
எனினும், விபத்தின் போது எமது சொகுசு பேரூந்தை செலுத்திய சாரதியின் தவறை எமது பணிக்குழு கவனம் செலுத்த தவறியுள்ளனர்.
இந்த தவறுக்கு வருந்துவதுடன், நாம் ஒன்று, இரண்டு வருடமல்ல. 30 வருடங்களுக்கு மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டு வருகின்றோம் . ஒரு நாள் கூட எமது பேரூந்தில் இருந்து எந்தவித சட்டவிரோதமான எதுவித செயற்பாடுகளும், இதுவரையில் இடம்பெறவில்லை.
அவ்வளவு தூரம் மக்களுக்கான சேவையை நாம் நிதானமாகவும், கவனமாகவும் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
பல ஆயிரக்கணக்கான பயணிகள்
தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் எமது சேவையைப் பெறுகின்றார்கள். குறித்த சம்பவத்தை வைத்து என் மீதும், எமது சேவை மீதும் சிலர் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் துரதிஸ்ட வசமாக இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் அதற்கு பொறுப்பான எனது நிறுவன உத்தியோகத்தர் கவனயின்மை தொடர்பில் மனம் வருந்துவதுடன், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் எமது சேவையை உறுதிப்படுத்தி எதிர் காலத்தில் முன்னெடுப்போம் எனத் தெரிவிப்பதுடன், எமது நிறுவனத்தின் மக்கள் சேவை இன்னும் வீரியத்துடனும் பலத்துடனும மக்களது நம்பிக்கை குறையாத வகையில தொடரும்.
எமது சேவை மீது மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. அதற்கேற்ப எமது சேவை தொடரும்.
இவ்விபத்துக்கு பின்னர் எமது நிறுவனத்தின் மீது கருசனை கொண்டு பலர் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் முகநூல் மூலமும் தொடப்பு கொண்டு நிலமைகளை விசாரித்து ஆலோசனைகள் வழங்கியிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்