எகிறும் கோவிட் தொற்று - சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதன் பாரதூரத்தன்மையைக் கருத்திற் கொண்டு திருமணம், மரண சடங்கு, அரச உத்தியோகத்தர்களை பணிக்கு அழைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தினம் சில முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
எவ்வாறிருப்பினும் தற்போது சகல மாவட்டங்களிலும் அசாதாரணமான வகையில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் அடுத்த இரு வாரங்களில் நாடு பாரதூரமானதொரு நிலைக்குச் செல்லும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை கோவிட் தொற்றாளர்களுக்கு மத்தியில் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இம்மாவட்டத்தில் இனங்காணப்படும் தொற்றாளர்களில் 75 வீதமானோர் டெல்டா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,