அமைச்சரின் கோரிக்கைக்கு இணக்கம்! வடக்கு, கிழக்கில் ஏற்படப்போகும் மாற்றம் - செய்திகளின் தொகுப்பு
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர்வேளாண்மை பண்ணைகளை அமைப்பற்கு தேவையான காணிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.இரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,