சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்(Video)
தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய உரிமை போராட்டமானது மௌனிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேசத்தின் தரப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகள் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான ஒரு சர்ச்சைதான் சுவிஸர்லாந்து நாட்டிலும் முன்வைக்கப்பட்டதாகவும் இந்த சர்ச்சையின் பின்னணியில் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் மாத்திரமே காணப்பட்டதாகவும் தலைவர் வே. பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்த முக்கியஸ்தர் கூறும் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் சுவிஸர்லாந்து நாட்டில் உள்ள புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தோடு துவாரகா என்ற வேறொரு பெண் தன்னுடன் பேசியதாகவும் அதிர்ச்சியூட்டும் விடயத்தையும் தெரிவித்துள்ளார்.
துவாரகா விவகாரம் ஒரு சதி என்று கூறும் குறித்த மெய்ப்பாதுகாவலர், துவாரகா விவகாரத்தில் தலைவர் வே. பிரபாகரனின் பாதுகாப்பு படையணியை சேர்ந்த வீரர்கள் ஏன் குறிவைக்கப்பட்டனர் என்றும், இதற்கு பொதுமக்களிடம் எவ்வாறான பணம் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறும் தகவல்களை தொடரும் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளார்...