விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான அறிவிப்பிற்கு இலங்கையின் பதில்! மகிந்த ஏமாற்றினார் என்று நினைக்கக்கூடும்(Video)
தற்போது ரணில் வி்க்ரமசிங்க ஆட்சி புரிந்தாலும், அரசாங்கம் என்பது முழுக்க முழுக்க மகிந்தவின் கூட்டத்தினராலேயே நடத்தப்படுகின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஜெயாத்தன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உயிரோடு நலமாக இருக்கின்றார், விரைவில் வருவார் என்று, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து இலங்கை அரசியல் பரப்பிலும் உலக பரப்பிலும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பழ.நெடுமாறனின் செய்தியை இலங்கை அரசாங்கம் உடனடியாக மறுத்திருந்தது. இது குறித்து தனது நிலைப்பாட்டை விபரிக்கையிலேயே ஜெயாத்தன் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் தெரவிக்கையில்,
அந்த அடிப்படையில், 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தொடர்பான நிலைப்பாட்டை மகிந்த அரசாங்கம் மிகத் தெளிவாக அறிவித்திருந்தது.
இதன்பின்னர் தான் அடுத்து வந்த தேர்தல்களில் அதிக பெரும்பான்மை பெற்று மகிந்த கூட்டம் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பினை சிங்கள் மக்கள் வழங்கியிருந்தனர்.
ஆனால் அந்த வரலாறு இன்று பொய்யென்று கூறப்பட்டால், மகிந்த எங்களை ஏமாற்றிவிட்டார், பேய் காட்டிவிட்டார் என்ற மிகப் பாரதூரமான ஒரு கோபம் சிங்கள மக்களிடத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.
இதன்காரணமாகத்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்ற பழ. நெடுமாறனின் செய்தியை உடனடியாக மறுக்க வேண்டிய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
