மாத்தளன் பகுதிக்கு மகன் சார்ளஸால் நகர்த்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்(Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தின் இறுதி நேரம் வரைக்கும் எங்களது மண்ணுக்காக, எமது மக்களுக்காக பெரும் இலட்சியத்தை சுமந்த இலட்சியவாதி. அவர் தனது இலட்சியத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் செய்யாமல், எந்தவொரு நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல், எந்தவொரு சமரசமும் இல்லாமல் பயணித்தவர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத் துறை பொறுப்பாளராக இருந்த சங்கீதன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உண்மையில், இதனை நான் இங்கு கூறுவது சரியோ தெரியாது, இறுதிகட்ட போர் மிகவும் இறுக்கமாக போய்க்கொண்டிருந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிறப்பு தளபதிகளை சந்தித்திருந்தார்.
இலட்சியத்தில் இறுக்மாக இருந்தார்
அதில், குறிப்பிட்ட சில விடயங்கள் தலைவர் பிரபாகரன் தனது இலட்சியத்தில் எவ்வளவு இறுக்கமாக இருந்தார் என்ற சான்றாக இருக்கின்றது.
இதில் இரண்டு விடயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன், ஒன்று ஆனந்தபுரம் பெட்டி எனக் கூறப்படுவது. 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி இரவு வரைக்கும், நாங்கள் நின்ற முன்னரங்கிலே இருந்து ஒரு சில மீட்டர் தொலைவிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனின் தங்குமிடம் இருந்தது.
அந்த இடத்தில் இருந்து நகரவேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தார். இதற்கு பிறகு எங்களுக்கு இடம் இருக்காது என்பதில் தெளிவாக இருந்தார். இருந்தும், எங்களது இராணுவ முயற்சிகள் இன்னும் தொடரும் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது என தெரிவித்து, தம்பி சார்ள்ஸூம் ஏனைய தளபதிகளும் தலைவரை வற்புறுத்தி அங்கிருந்து எங்களது மாத்தளன் பகுதிக்கு கொண்டு சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
